×

டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் இன்று பேரணி: இரண்டிரண்டு பேராக பேரணியை தொடங்க உள்ள விவசாயிகள்!

டெல்லி: தடை உத்தரவை மீறி தலைநகர் டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் இன்று பேரணி செல்ல உள்ளதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாத உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு செல்வோம் போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோட்சா, கிசான் மஸ்தூர் மோட்சா ஆகிய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் – ஹரியானா இடையே அமைந்திருக்கும் சம்பு எல்லையில் நேற்று முன்தினம் குவிந்தனர். அவர்களுடன் பஞ்சாப் காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையினர்; டெல்லி நோக்கி அமைதியாக நடைபயணம் மேற்கொள்ளப்போவதாகவும், டிராக்டர் பேரணி நடத்த போவதில்லை எனவும் விவசாயிகள் உறுதி அளித்துள்ளதாக கூறினர். இந்நிலையில் டெல்லியில் 4 பேர் கூட தடை விதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் ஜோடியாக அதாவது இரண்டிரண்டு பேராக சம்பு பகுதியில் இருந்து டெல்லி நோக்கி இன்று மதியம் பேரணி தொடங்குவார்கள் என விவசாய சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார். தங்கள் பேரணியை அரசு தடுத்து நிறுத்தினால் அது தார்மீக வெற்றி தான் என்றும் அவர் தெரிவித்தார்.

போலீசாரின் கெடுபிடியை பார்க்கும் போது இது பஞ்சாப் – அரியானா எல்லை போல் தெரியவில்லை, மாறாக சர்வதேச எல்லை போல தெரிகிறது என்றும் விவசாய சங்க தலைவர்கள் குற்றச்சாட்டினர். விவசாயிகளின் அறிவிப்பை அடுத்து அரியானா எல்லைப்பகுதியில் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பேரணி காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

The post டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் இன்று பேரணி: இரண்டிரண்டு பேராக பேரணியை தொடங்க உள்ள விவசாயிகள்! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED மகள் இருக்கும் இடம் தெரிந்தும்...