×

டிரைவரை தாக்கியதாக புகார் மேட்டுப்பாளையம் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

 

கோவை, டிச.6: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தெளபீக் உமர் (21). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, எஸ்ஐ குருசந்திர வடிவேல் தெளபீக் உமரின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும், இதில் அவரின் இரு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவை எஸ்பி கார்த்திகேயனிடம் அவரது தாயார் ஆயிஷா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், புகாருக்குள்ளான எஸ்ஐ குருசந்திர வடிவேலுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கோவை எஸ்பி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

 

The post டிரைவரை தாக்கியதாக புகார் மேட்டுப்பாளையம் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam SI ,Armed Forces ,Coimbatore ,Telabeek Umar ,Mettupalayam ,Mettupalayam police station ,SI ,Guruchandra Vadivel Telabeek Umarin ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு...