×

சாலைப்புதூர் சுகாதார நிலையத்தில் பயனாளிகள் நலச்சங்க கூட்டம்

சாத்தான்குளம், டிச. 6: சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயனாளிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. கட்டாரிமங்கலம் பஞ். செயலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பிருந்தா மகேஸ்வரி முன்னிலை வகித்து கர்ப்பிணிகள் பாதுகாப்பு, சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். நோயாளிகள் நலச்சங்க செயல்பாடுகள், காய்ச்சல் அறிகுறி இருந்தால் பாதுகாப்புடன் இருப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் எடுத்துரைத்தார். ஆய்வக நுட்பநர் விமல்கேபா, மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை குறித்து தெரிவித்தார். தொடர்ந்து 2 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் செவிலியர்கள் பெரில் மேரி, பொன்சீலி, பொன்செல்வி, மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் அஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாலைப்புதூர் சுகாதார நிலையத்தில் பயனாளிகள் நலச்சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Beneficiaries Association Meeting ,Salippur Health Centre ,Satankulam ,Saliphudur Government Primary Health Center ,Chatankulam ,Katarimangalam Panj ,Venkatesh ,Medical Officer ,Brinda Maheshwari ,
× RELATED புளியங்குளத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்