×

குமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம்

நாகர்கோவில், டிச.6: கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் சிதம்பரம் மாத அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் பெருமாள் மாத வரவு செலவை தாக்கல் செய்தார். கூட்டத்தில், கேபி ரோடு, காப்பிக்காடு, ராஜாக்கமங்கலம் கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை உள்ளாட்சி துறை பராமரிப்பிற்கு ஒதுக்கி கலெக்டர் ஆணை பிறப்பித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் வாகனங்கள் நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்து டெண்டர் வெளியிடுவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். ஆட்டோக்களில் பயணிக்கும்போது பிரச்னை ஏற்பட்டால் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை எழுதி வைக்க உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post குமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,District ,Consumer Protection ,Center ,Nagercoil ,Kanyakumari District Consumer Protection Center ,Vice President ,Rajendran ,General Secretary ,Chidambaram ,Treasurer ,Perumal ,Kumari District Consumer Protection Center ,Dinakaran ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...