×

முத்தூட் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து ரூ.1.16 கோடி மோசடி: நிதி நிறுவன மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து ஒரு கோடியே 16 லட்சம் ரூபாயை கையாடல் செய்த புகாரில் கிளை மேலாளர் உட்பட 5 பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் முத்தூட் ஃபின்கார்ப் என்ற தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனமானது இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளர் சத்திய பிரகாஷ் உள்ளிட்ட 6 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அதிக வட்டிக்கு நகைகளை அடமானம் வைக்கக்கூடிய சூழல் உள்ளதால் அதிகமானோர் இதில் பயனடைந்து வருகின்றனர். இந்த கிளையில் மேலாளராக பணிபுரியக்கூடிய சத்தியபிரகாஷ் போலியான நகைகளை அடகு வைத்தது போல ஏமாற்றி கிட்டத்தட்ட ரூ.1.16 கோடி கையாடல் செய்துள்ளார்.இந்த குற்றத்திற்கு துணை போனதாக நிதி நிறுவன ஊழியர்கள் ஐஸ்வர்யா, ராஜ்குமார், சங்கீதா, செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது நாகப்பட்டின மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட நிறுவன மேலாளர் தற்போது மன்னார்குடி பகுதியில் தலைமறைவாக உள்ளதாகவும் மற்ற பணியாளர்களை தேடி வருவதாகவும் நாகப்பட்டினம் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போனதை 3 முதல் 6 மாத காலத்திற்கு ஒருமுறை நடக்கும் தணிக்கை குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரை திருச்சி மண்டலத்தில் உள்ள பகுதி மேலாளர் இதுகுறித்த புகாரை குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக விசாரணை செய்து நிறுவன மேலாளர் மோசடி செய்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அந்த நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்துள்ள சுற்றுவட்டார பகுதியினர் அதிர்ச்சியில் உள்ளனர்….

The post முத்தூட் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து ரூ.1.16 கோடி மோசடி: நிதி நிறுவன மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Muthoot Finance Company ,Nagai ,Velankanni, Nagai district ,Dinakaran ,
× RELATED எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை...