×

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதை ஏற்க முடியாது: ராமதாஸ் கண்டனம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ேநற்று அளித்த பேட்டி: கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற அறிக்கையை பாமக ஆதரிக்கிறது. இதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் வரும் 21ம் தேதி உழவர் பேரியக்க மாநாடு நடைபெற உள்ளது.

டெல்லியில் சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம். கடை வாடகையுடன் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம் நடத்தியும், ஒன்றிய அரசு திரும்ப பெற மறுக்கிறது. இம்முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது. மானாமதுரையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பணியாற்றிய மருத்துவர்களை பாராட்டுகிறேன். நோயாளிகளிடம் மருத்துவர்கள் கனிவாக பேசினால் பாதி நோய் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதை ஏற்க முடியாது: ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Ramadoss ,Tindivanam ,Bamaga ,Thilapuram ,Pamaka ,Ramdas ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு