×

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க திமுக நிகழ்ச்சிக்கு பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் “திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுககு, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் அனைவரையும் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாம்வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, இனி வருங்காலங்களில், எந்தவொரு இடத்திலும் முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க திமுக நிகழ்ச்சிக்கு பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது: நிர்வாகிகள், தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,RS Bharati ,Tamil Nadu ,President ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED சாதனை விளக்க கூட்டம்