சென்னை: புயல் பாதிப்பிலும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பேரிடரிலும் அதிமுக அரசியல் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரை மக்கள் பாராட்டுவதை பொறுக்க முடியாமல் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். 2015-ல் அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் 289 பேர் பலியானார்கள் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
The post பேரிடரிலும் அதிமுக அரசியல் செய்கிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கண்டனம் appeared first on Dinakaran.