சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் பால்கனி மேற்கூரை விழுந்து இளைஞர் பலியானதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீனிவாசபுரத்தில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனி மேற்கூரை விழுந்து இளைஞர் குலாப் உயிரிழந்தார். உயிரிழந்த குலாபின் உறவினர்கள் மற்றும் சீனிவாசபுரம் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அடையாறு திரு.வி.க.
மேம்பாலத்தில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சென்னை பட்டினப்பாக்கத்தில் மேற்கூரை விழுந்து இளைஞர் பலி: உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.