- மனக்குறை
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் மாவட்டம்
- முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்
- தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம்
- குறைகேட்பு மன்றம்
- அஞ்சல்
- தின மலர்
தஞ்சாவூர், டிச. 5: அஞ்சல் குறைதீர் மன்றக் கூட்டம் வரும் டிச 26ம் தேதி அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அஞ்சல் குறைதீர் மன்றக் கூட்டம் வரும் டிச 26ம் தேதி, மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகம் பின்புறம் நடத்தப்படும். பொது மக்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை தபால் மூலம் இந்த அலுவலகத்திற்கு 19.12.2024 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். நேரடியாக கலந்து கொள்ள விரும்புபவர்கள், இந்த குறைதீர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
The post வரும் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.