- பிறகு நான்
- பெரியகுளம் மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம்
- பெரியகுளம் மாவட்ட சலவைத் தொழிலாளர் தலைவர் சங்கம்
- தேனி மாவட்டம்
- தின மலர்
தேனி, டிச.5: பெரியகுளம் வட்டார சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையிடத்தில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் வீடு கட்ட உதவிடுமாறு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பெரியகுளம் வட்டார சலவைத் தொழிலாளர் தலைமைச் சங்கத்தை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரியகுளம் நகர் தென்கரை கிராமத்தில் அரசால் ஒரு ஏக்கர் 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு சலவைத் தொழிலாளர் மற்றும் முடிதிருத்துவோர் சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கு தலா ஒன்றரை சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டக்களாக வழங்கப்பட்டது.
இவ்வீட்டு மனையிடத்தில் 35 குடும்பத்தினர் வீடுகட்டியும், தகர செட் அமைத்தும் குடியிருந்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு குடிநீர், கழிப்பறை வசதியில்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். எங்களுக்கு வழங்கிய வீட்டுமனையிடங்களில் அனைவருக்கும் வீடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரவேண்டும். மேலும், இப்பகுதியில் காலியாக உள்ள 40 சென்ட் இடத்தில் சலவைத் துறையான டோபிகானா அமைத்து தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டித் தரக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.