- யூனியன் அரசு
- மதுரை
- பிசி
- எம்பிசி
- சீர்மரபினர்
- அரசு
- ஐஐடி
- ஐ.ஐ.எம்
- ஐஐஐடி
- தே.தொ.கவும்
- யூனியன் பல்கலைக்கழகங்கள்
- தின மலர்
மதுரை, டிச. 5: ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பயிலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிசி, எம்பிசி, மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2024 -25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிசி, எம்பிசி, மற்றும் சீர்மரபினர் பிரிவை சார்ந்த, மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களுக்குகல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக கற்பிப்புக் கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாயக் கட்டணம் ஆகியவற்றுக்கான மாணவர்கள் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகைக்கு, 2024-25ம் கல்வியாண்டில் புதிதாகவும் மற்றும் புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவிகள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் தகவல் பெறலாம்.
மேலும் tngovtiit scholarship@gmail.com என்ற முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5, மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை அல்லது மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், 2024-25ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து சென்னை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை புதுப்பித்தலுக்கு டிச.15ம் தேதிக்குள் மற்றும் புதியதாய் விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை ஜன.15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை: டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.