×

ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

செங்கோட்டை,டிச.5: தெற்கு இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார அமைப்பு தெற்கு மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டியை கோவில்பட்டி கவுனியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் முகமது ஆதில் மற்றும் ட்ரஷர் மழலையர் பள்ளி மாணவன் ஹர்ஷித் தெற்கு மண்டல அளவில் முதலிடத்திலும், அஸ்ரித் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். தெற்கு மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் சேர்மன் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்தினர்.

The post ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Treasure Island International School ,Sengottai ,South Indian Sports and Cultural Organization ,South Zone Level Skating Competition ,Kovilpatti Counion Matriculation High School ,Dinakaran ,
× RELATED தேசிய அளவிலான தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை