×

ரயில்வே எஸ்.ஐ தேர்வு செல்போனில் பிட் அடித்த காவலர்

வேலூர்: நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் மையத்தில் நடந்த தேர்வில் பங்கேற்க 340 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் 140 பேர் பங்கேற்றனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் புருஷோத்தமன் (29), செல்போனை மறைத்து வைத்து அதைப் பார்த்து காப்பியடித்து தேர்வு எழுதியதாக தெரிகிறது. இதனை அங்கிருந்த சிசிடிவி காட்சி மூலம் கண்காணிப்பாளர்கள் கவனித்து, புருஷோத்தமனை தேர்வறையில் இருந்து உடனடியாக வெளியேற்றினர். இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புகாரின்படி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post ரயில்வே எஸ்.ஐ தேர்வு செல்போனில் பிட் அடித்த காவலர் appeared first on Dinakaran.

Tags : Railway S.I ,Vellore ,Railway Protection Force ,Vellore New Bus Station ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...