×

திருச்சியில் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

மதுரை: திருச்சியில் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுதாரர்கள் வாதத்தின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் 3 பிரிவுகளை மட்டும் நீக்கி ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. 370ஏ, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி குட் ஷெப்பர்ட் மிஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிதியோன் ஜேகன், பாஸ்டர் கிதியோன் ஜேக்கப் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்கள் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

The post திருச்சியில் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Trichy ,Madurai ,ICourt ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...