×

உசிலம்பட்டி அரசு மாணவர்கள் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

உசிலம்பட்டி, டிச. 4: உசிலம்பட்டி, அரசு மாணவர்கள் விடுதியில் கலெக்டர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள அரசு கள்ளர் மாணவர் விடுதியில் கலெக்டர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விடுதி காப்பாளர் ஜெயச்சந்திரனிடம் சமையல் செய்வது குறித்தும், மாணவர்கள் பதிவேடு குறித்து விசாரணை செய்தார்.

இந்த விசாரணையின் போது விடுதி வளாகத்தில், கொசுத்தொல்லை இருப்பதை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ச்சியாக உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து அங்கிருந்த அலுவலர்களிடம் நகராட்சி அலுவலகத்திலும் கொசு தொல்லை இருப்பதை அறித்து உடனடியாக உசிலம்பட்டி பகுதியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிட்டுச் சென்றார்.

The post உசிலம்பட்டி அரசு மாணவர்கள் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Usilampatti Government Students Hostel ,Usilampatti ,Collector ,Sangeetha ,Usilambatti, ,Government Students Hostel ,Government Kallar Student Hostel ,Usilambatti Government Higher Secondary School ,Madurai District ,Usilampatti Government Student Hostel ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை