×

திருமருகல் அருகே வடிகால் வசதி அமைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு

நாகப்பட்டினம்,டிச.3: திருமருகல் அருகே வடகால் வசதி அமைத்து தர வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு வந்தது. திருமருகல் அருகே கிடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எம்ஜிஆர் நகர், மெயின் ரோடு பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் வடிவதற்கு வடிகால் வசதி இல்லாமல் உள்ளது.

இதனால் மெயின் ரோட்டில் இருந்து எம்ஜிஆர் நகர் வரையிலான சாலைகளில் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் தண்ணீரை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post திருமருகல் அருகே வடிகால் வசதி அமைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Tirumarukal ,Kraditir ,Nagapattinam ,North Bank ,Thirumarugal ,Nagapattinam Collector ,Kitamangalam ,Thirumarukal ,Kuradithir ,Dinakaran ,
× RELATED விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்