×

மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி தூதரக சான்றிதழ்; 55 பேர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் போலியாக தூதரக சான்றிதழ் அளித்த 55 பேர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு கட்டிடத்தில் டிஜிட்டல் டென்டிஸ்ட்ரி எனும் கருத்தரங்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.பின்னர் அனைத்து பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் தங்களது துறையில் சிறப்பாகவும், ஒருங்கிணைந்த பயிற்சி மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு சுகாதார நலனுக்கான உயர்திறன் மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை பொதுவாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சேர்க்கை நடவடிக்கைகளில் விண்ணப்ப படிவங்களை அவர்கள் கூர்ந்து கவனித்து ஆராய்ந்ததில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது இளங்கலை மருத்துவ படிப்பு பொறுத்தவரை, 8 பேருடைய என்ஆர்ஐ வெளிநாடு கோட்டாவில் படித்தவர்கள் என்று தூதரகத்தில் வாங்கப்பட்ட சான்றிதழ்கள் போலி என்று நிரூபணமாகியிருக்கிறது. அதேபோல் முதுநிலை படிப்பை பொறுத்தவரை 47 மருத்துவர்கள் போலியாக தூதரக சான்றிதழை பெற்றிருக்கிறார்கள். இந்த 47 பேருக்கும் எந்த இருக்கையும் அமல்படுத்தப்படவில்லை. அமல்படுத்தும் முன் சான்றிதழ் சரிபார்பு நிலையிலேயே போலி தூதரக சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 47 பேர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காவல் துறை ஆணையரிடத்தில் புகார் தரப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 15 அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கை அறைகள் திறந்துள்ளோம். மேலும் தமிழ்நாடு முழுக்க 40 மருத்துவமனைகளில் திறந்து வைக்க உள்ளோம். இன்னும் நிறைய திறப்பதற்கான முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இப்பொழுது இது வந்ததற்கு பிறகு கொஞ்சம் வசதி படைத்தவர்களும் அரசியல் தலைவர்களும் கூட அரசு மருத்துவமனையில் தான் இருக்கிறார்கள். தொடர்ந்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலி தூதரக சான்றிதழ்; 55 பேர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu ,Dr. ,MGR Medical University Centenary ,Chennai Guindy… ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48...