×

பெஞ்சல் புயல் கனமழையால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் கொளவாய் ஏரி

செங்கல்பட்டு: பெஞ்சல் புயலால் பெய்த கனமழைக்காரணமாக, செங்கல்பட்டு கொளவாய் ஏரி நிரம்பி, கடல்போல்காட்சியளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலேயே பெரிய ஏரிகளில், செங்கல்பட்டு கொளவாய் எரியும் ஒன்று. இந்த ஏரி, 2,179 ஏக்கர் பரப்பளவை கொண்டது. தற்போது, பெஞ்சல் புயலால் ஒரு வாரமாக பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு ஏரிகள் குளங்கள், குட்டைகள், கால்வாய்களில் இருந்து இந்த ஏரிக்கு நீர் வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு கொளவாய் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.

இதனால், சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் இருமார்க்கத்திலும் செல்லக்கூடிய கார், இருசக்கார வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடல்போல கட்சியளிக்கும், இந்த கொளவாய் ஏரியின் அருகாமையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டும் ஏரியின் அழகை ரசித்தும் செல்கின்றனர். கொளவாய் ஏரியை மேலும் சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நீர்வளத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடல்போல் காட்சி அளிக்கும் செங்கல்பட்டு கொளவாய் ஏரியின் கழுகு பார்வையில் பிரமாண்டமாக உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வற்றாத ஏரியாக இருந்து வரும் கொளவாய் ஏரியை தூர் வாரி தண்ணீரை சேகரித்து படகு சேவையை மீண்டும் அமைத்து சுற்றுல தலமாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும். ஏரியில் இருந்து தனியார் நிறுவனங்கள் எடுக்கும் தண்ணீரை தடுக்க வேண்டும். விவசாயத்திற்கும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post பெஞ்சல் புயல் கனமழையால் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் கொளவாய் ஏரி appeared first on Dinakaran.

Tags : Kolavai lake ,Benjal storm ,Chengalpattu ,Cyclone Benjal ,Chengalpattu district ,Chengalpattu Kolavai ,Benjal ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல், வெள்ளத்தால்...