சென்னை: தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புயல் எப்போதும் பேரிடரையும், பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஒரு இயற்கை சீற்றமே. மக்கள் துன்புறும் வேளையில், ஆட்சியாளர்களை குறிவைத்து குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். பல மாவட்டங்களில் வெள்ளநீர் வடியவில்லை. இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்த சூழ்நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. எனவே, நம் தோழர்கள், தங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொண்ட பிறகே பேரிடர் பணிகள் மற்றும் உதவிகளை செய்ய வேண்டும். வெள்ளநீர் முழுவதுமாக வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். மக்களோடு மக்களாக கரம் கோத்து நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
The post பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும்; ஆட்சியாளர்களை குறைகூறி அரசியல் செய்ய வேண்டாம்: தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் appeared first on Dinakaran.