×

உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்: மீஞ்சூர் அருகே சோகம்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருகே உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. இங்கு வல்லூர் மின்நகரைச் சேர்ந்த வினோத்குமார் (35) என்பவர் தினமும் வந்து பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். திருமணம் ஆகாத இவர் நேற்று காலை வழக்கம்போல் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சக நண்பர்கள் மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு வினோத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்பயிற்சி செய்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வினோத்குமார் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பால் வாலிபர் மரணம்: மீஞ்சூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Ponneri ,Meenjoor ,Athipattu ,Vinod Kumar ,Vallur Minnagar ,
× RELATED நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற...