×

அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் வாழ எனக்கு பிடிக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் கட்கரி பேச்சு


புதுடெல்லி: அதிக காற்று மாசு காரணமாக டெல்லியில் வாழ பிடிக்கவில்லை என ஒன்றிய அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் தரம் தற்போது மேம்பட்ட நிலையில் நேற்று 274ஆக பதிவானது. தொடர்ந்து மூன்றாம்நாளாக காற்று மாசு குறைந்து காணப்பட்டது.

கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது டெல்லி மக்கள் சுவாசிப்பது எளிதாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, “டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவால் எனக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் எனக்கு டெல்லியில் வாழவும், டெல்லிக்கு செல்லவும் பிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

The post அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் வாழ எனக்கு பிடிக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் கட்கரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Minister ,Gadkari ,New Delhi ,Union Minister Gadkari ,Dinakaran ,
× RELATED “ஊழல் ஒப்பந்ததாரர்கள் புல்டோசரால்...