×

இணையவழி குற்றதடுப்புப் பிரிவு, தலைமையகம். தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆள்மாறாட்ட மோசடி

சென்னை :வணிகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்து ஒரு புதிய மற்றும் ஆபத்தான மோசடி புகார் செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் CEOக்கள், நிர்வாக இயக்குநர்கள் அல்லது நிறுவனங்களின் உரிமையாளர்கள் போல ஆள்மாறாட்டம் செய்து, போலியான வாட்ஸ்அப் அக்கௌன்ட்களை உருவாக்கி கணக்காளர்களை ஏமாற்றி நிதி பரிமாற்றம் செய்கின்றனர்.சைபர் கிரைம் பிரிவு, தமிழ்நாடு, இதுபோன்ற மோசடிகளில் அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளது. அவை முக்கியமாக நிறுவனத்தின் கணக்காளர்களைக் குறிவைத்து, அவசர காலத்தை மேற்கோள்காட்டி நிதியை உடனடியாக மாற்றுமாறு வலியுறுத்துகின்றன. ஜனவரி முதல் நவம்பர் 2024 வரை சுமார் 170 புகார்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டலில் (www.cybercrime.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோசடி எவ்வாறு நடக்கிறது:
1. மோசடி செய்பவர்கள் ஒரு நிறுவனத்தின் CEO/MD/உரிமையாளராக காட்டிக்கொண்டு போலியான WhatsApp சுயவிவரத்தை உருவாக்குகிறார்கள்.
2. அவர்கள் நிறுவனத்தின் கணக்காளரை தொடர்புகொண்டு, ஒரு அவசர அல்லது அசாதாரண சூழ்நிலையை மேற்கோள்காட்டுகின்றனர்.
3. ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு நிதியை மாற்றுமாறு மோசடி செய்பவர் கணக்காளரிடம் கூறுகின்றனர்.

எச்சரிக்கை அறிகுறிகள்:

CEO/MD/ உரிமையாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து உங்களிடம் இல்லாத ஒரு எண்ணிலிருந்து வரும் WhatsApp செய்திகள்.
நிதி பரிமாற்றத்திற்கான அவசர அல்லது அசாதாரணமானசூழல்களை மேற்காட்டுதல்.
நிலையான நிறுவன நடைமுறைகளைத் தவிர்த்து, நிறுவனத்திற்கு சம்மந்தம் அல்லாத ஒரு வங்கிகணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ய வலியுறுத்துதல்.

பொது மக்களுக்கான அறிவுரை:

உங்களுக்கு வந்த WhatsApp செய்தியின் நம்பகத் தன்மையை உங்கள் நிறுவனத்தின் சக ஊழியரிடம் விசாரித்து சரிபார்க்கவும்.

அவசர காலத்தை மேற்காட்டி உங்களை யாரேனும் பணம் அனுப்பகோரினால் மிகவும் கவனமாக இருக்கவும். அவை பெரும்பாலும் மோசடிகளாகவே இருக்கக்கூடும்.

நிதி பரிவர்த்தனைகளுக்கான நிலையான நிறுவன நெறிமுறைகளைப் பின்பற்றவும். தங்களிடம் பணம் கூறுபவர் உங்கள் நிறுவன தலைமை அதிகாரியாக இருப்பினும் அவர்களை அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்.

இந்த மோசடி பற்றி அனைத்து நிறுவங்களும் அவர்களின் அக்கௌன்ட்டன்டுகளுக்குக்கற்பித்து, அவர்கள் விழிப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தவும்.

புகார் அளிக்க

நீங்கள் இது போன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் புகாரைப்பதிவு செய்யவும்.

The post இணையவழி குற்றதடுப்புப் பிரிவு, தலைமையகம். தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆள்மாறாட்ட மோசடி appeared first on Dinakaran.

Tags : Ecommerce Crime Unit ,Chennai ,WhatsApp ,Ecommerce ,Criminal Division ,Dinakaran ,
× RELATED வாட்ஸ் அப்பில் ஆவணங்களை ஸ்கேன்...