×

சவாரி இறக்கிவிட்டுவிட்டு ஓரமாக நின்றபோது பால்கனி விழுந்து ஆட்டோ நொறுங்கியது: செல்போனில் பேசியதால் உயிர் தப்பினார் டிரைவர்

பெரம்பூர்: சவாரி வந்தவரை இறக்கிவிட்டுவிட்டு வீட்டின் ஓரமாக நின்றபோது பால்கனி இடிந்துவிழுந்து ஆட்டோ நொறுங்கியது. அந்த சமயத்தில் செல்போன் அழைப்பு வந்ததால் ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை பெரம்பூர் லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமதுஅலி ஷகீல் (34). இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். நேற்றிரவு 10.30 மணி அளவில் திருவிக.நகர் தீட்டி தோட்டம் 7வது தெரு பகுதிக்கு சவாரி சென்றுள்ளார்.

பின்னர் அங்குள்ள பாபு (60) என்பவர் வீட்டின் முன் ஓரமாக சவாரி வந்த நபரை இறக்கிவிட்டுவிட்டு நின்றுள்ளார். அந்த சமயத்தில் தனது செல்போனில் அழைப்பு வந்ததால் ஆட்டோவில் இருந்து இறங்கிச் சிறிது தூரம் நடந்தபடி செல்போனில் பேசிக்கொண்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் மேலே பாபு வீட்டின் பால்கனி இடிந்துவிழுந்ததில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது அலி உடனடியாக போனில் பேசுவதை பாதியில் கட் செய்துவிட்டு ஓடிவந்து தனது ஆட்டோவின் நிலைமை பார்த்து அழுது உள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவிக.நகர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இடிந்துவிழுந்த வீடு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பாபு குடும்பத்தை உடனடியாக வீட்டில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சவாரி இறக்கிவிட்டுவிட்டு ஓரமாக நின்றபோது பால்கனி விழுந்து ஆட்டோ நொறுங்கியது: செல்போனில் பேசியதால் உயிர் தப்பினார் டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mohammad Ali ,Chennai Perambur Lakshmi Nagar Main Road ,Dinakaran ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...