×

மூணாறு அருகே புலி நகத்தை விற்க முயன்றவர்கள் கைது

மூணாறு, டிச. 3: கேரளா மாநிலம் மூணாறு அருகே ஓராண்டுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட புலியின் நகங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயன்றவர்களை வனத்துறை அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று பிடித்தனர். வனத்துறையின் கோதமங்கலம் சிறப்பு பறக்கும் படையினர் மூணாறு அருகே உள்ள சித்ராபுரம் பகுதியில் புலியின் நகங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயன்ற ஆணச்சால் மற்றும் தோக்குபாறை பகுதியை சேர்ந்த எபின் குஞ்சுமோன் (27), ஆனந்து விஸ்வநாதன் (27), சித்திராபுரம் தட்டாத்திமுக்கு பகுதியை சேர்ந்த ஷிபு ரமனாச்சாரி (39) போன்றவர்களை வனத்துறை அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும் ஷிபுவின் வீட்டில் இருந்து புலியை சுட்டு கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியும் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக வனத்துறையின் சிறப்பு பறக்கும் படையினர் குற்றவாளிகளை கண்காணித்து வந்தனர். சித்திராபுரம் பகுதியில் ஓராண்டுக்கு முன் மூவரும் சேர்ந்து புலியை சுட்டு கொன்றனர். இந்த கொல்லப்பட்ட புலியின் நகங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய முயற்சி செய்வதற்கிடையே குற்றவாளிகள் பிடிபட்டனர். இது சம்பந்தமாக கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

 

The post மூணாறு அருகே புலி நகத்தை விற்க முயன்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Munnar ,Munnar, Kerala ,Gothamangalam Special Flying Squad ,Forest Department ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல், மூணாறில் வாட்டுது பனி நடுக்கும் குளிர்காலம் ஆரம்பம்