ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதியில் பெஞ்சல் புழல் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக பரவலாக இடைவிடாமல் கனமழை மற்றும் லேசான மழை பெய்து வந்தது. இதனால், பெருமபாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பள்ளிப்பட்டு – சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள நீர்வளத்துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததில், சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் மூலம் மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினர்.
The post தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம் appeared first on Dinakaran.