×

சென்னை மாநில கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சென்னை மாநில கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான மாணவர்கள் 4 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் என்பவரை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே விரட்டி சென்று தாக்கினர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவர் சுந்தர் உயிரிழந்தார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கில் ஈஸ்வர், சந்துரு, ஹரிபிரசாத், கமலேஷ்வர், யுவராஜ் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டு கல்லூரியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையில் நீதிமன்றம் மாணவர்களின் நடவடிக்கை குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சேவை செய்ய சொல்லிவிட்டு ஜாமீன் வழங்கப்பட்டுவிடுவதாக ஒரு கண்ணோட்டம் இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோர் நிலையை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளில் மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கல்லூரிகளின் மாணவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன என்கிற விவரத்தை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்த விவரத்தை காவல்துறை தாக்கல் செய்திருந்தது.

அதில் கடந்த 10 ஆண்டுகளில் சென்னைக் கல்லூரி மானவர்கள் மீது மொத்தம் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 33 வழக்குகள் ரயில்வே போலீசார் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா 4 மாணவர்களுக்கு நிபந்தைனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது 2 மாணவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை சேவையாற்றவும், மற்ற 2 மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இதேபோல தினமும் சேவையாற்ற வேண்டும். வரும் 20ஆம் தேதி வரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றவும். 20ஆம் தேதி பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post சென்னை மாநில கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Court ,Chennai State College ,Chennai ,Chennai High Court ,Pachaiyappan College ,State College ,Sundar ,Central Railway Station ,
× RELATED மாநில கல்லூரி மாணவன் தாக்கப்பட்டு...