×

தி.மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு வருகை என அமைச்சர் எ.வ.வேலு தகவல்!!

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது.இதனால் அந்த வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி கொண்டனர். ராஜ்குமார், மீனா, கவுதம், வினியா, மகா, தேவிகா, வினோதினி ஆகியோர் வீடுகளில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட வ.உ.சி. நகரில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ராட்சத பாறை விழுந்தது. வ.உ.சி. நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறம் மலை அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்தன. இதையடுத்து அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர், மாநில பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

நிலச்சரிவால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். இதனிடையே திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த பின் அளித்த பேட்டியில், “1965க்குப் பிறகு திருவண்ணாமலையில் அதிக மழைப்பொழிவு; திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஏரிகளில் உடைப்பு இல்லை. கனமழை காரணமாக ஏராளமான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. முதலமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு வர உள்ளனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தி.மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு வருகை என அமைச்சர் எ.வ.வேலு தகவல்!! appeared first on Dinakaran.

Tags : IIT ,Minister ,Velu ,Tiruvannamalai ,Fengel ,Vauci Nagar ,Deepam ,Dinakaran ,
× RELATED ஐஐடி ஆராய்ச்சி மையம், ஆய்வகங்களை ஜன.3, 4ம் தேதிகளில் மக்கள் பார்வையிடலாம்