ஆண்டிபட்டி, டிச. 2: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மறு சீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் ரவி தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட தலைவர் முருகேசன், மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் தலைவர் செல்வராஜ் பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து 20 பேர் விலகி மாவட்ட தலைவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜாராம், நகர துணைத் தலைவர் வேல்மணி, வட்டார செயலாளர் பாலமுருகன், வழக்கறிஞர் மலை முருகன், அண்ணாமலை, மாசாணம் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
The post ஆண்டிபட்டியில் காங்கிரஸ் கட்சியின் மறு சீரமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.