தேவதானப்பட்டி, டிச. 2: தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சியில் மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கெங்குவார்பட்டி மயானம் ஊரில் இருந்து கிழக்கு பகுதியில் மஞ்சளாற்றங்கரையில் அமைந்துள்ளது.
இந்த மயானத்திற்கு செல்லும் சாலை மிகவும் பெயர்ந்து பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி மயானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கெங்குவார்பட்டி ஊரில் இருந்து மயானம் வரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெங்குவார்பட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேவதானப்பட்டி அருகே மயானச் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.