×

பெண்களின் அவசர உதவிக்கு 181 எண்ணை அழைக்கலாம்

 

சிவகங்கை, டிச.2: சிவகங்கை மாவட்டத்தில் பெண்களின் அவசர உதவிக்கு 181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:பெண்களின் உரிமை காக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் 181ஐ அழைக்கலாம். பெண்களை பாதுகாக்க, பாலியல் வன்முறை, வன்கொடுமை, குடும்ப பிரச்னை இவற்றில் இருந்து பாதுகாக்க சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் 24மணி நேரமும் இலவச வாகன சேவையுடன் செயல்படுகிறது.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் பாதுகாப்பிற்காக அவசர சேவைகள், மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல் துறை உதவி, உளவியல் ஆலோசனை, மீட்புதல் உதவி வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தகுந்த ஆலோசனை அளித்தல் மற்றும் தேவையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்குவதற்கும் இடவசதி உண்டு. எனவே பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181ஐ பெண்கள் அழைக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெண்களின் அவசர உதவிக்கு 181 எண்ணை அழைக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து