×

பரமக்குடி பகுதியில் மரக்கன்று நட்ட எம்எல்ஏ

பரமக்குடி,டிச.2: தமிழகம் முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் பார்த்திப்பனூர் முதியோர் இல்லத்தில் எம்எல்ஏ முருகேசன், இனிப்புடன் கூடிய மதிய உணவு வழங்கினார். தொடர்ந்து பரமக்குடி 1வது வார்டு மஞ்ச பட்டணத்தில் உள்ள ஆரம்ப சுகாதார சுகாதார நிலையத்தில் மகாகனி, செம்மரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை எம்எல்ஏ முருகேசன் நட்டு வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அமிர்தவள்ளி, 1வது வார்டு கவுன்சிலர் தேவகிட்டு, லண்டன் ரமேஷ், நயினார் கோவில் ஒன்றிய துணைச் செயலாளர் திலகர், மருத்துவ அலுவலர் இனிய அருண், வடக்கு நகர் அவைத் தலைவர் முகமது சேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பரமக்குடி பகுதியில் மரக்கன்று நட்ட எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Paramakkudy ,Paramakudi ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Tamil Nadu ,Murugesan ,Ramanathapuram ,Parthippanur ,Paramakkudi ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி