மதுரை, டிச. 2: பிரசித்தி பெற்ற அழகர்கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது ஐயப்பன் சீசன் என்பதால், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று அழகர்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். முன்னதாக மலைமேல் உள்ள ராக்காயி அம்மன் கோயிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடிய அவர்கள் ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.
பின்னர் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் சென்று வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.இதனைத்தொடர்ந்து மலைக்கு கீழே உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாளையும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தரிசனம் செய்தனர்.
நேற்று சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் பெருமாள் காட்சியளித்தார். பின்னர் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் பக்தர்கள் சந்தனம் சாற்றி வழிபட்டனர். தற்போது அழகர்கோயிலில் சாரலுடன், பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த சூழல் நிழவுவதால், பக்தர்கள் இயற்கை அழகை ரசித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
The post அழகர்கோயிலில் திரண்ட ஐயப்ப பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர் appeared first on Dinakaran.