×

புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

 

ஈரோடு,டிச.2: ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் பழைமை வாய்ந்த புனித அமல அன்னை ஆலயம்(சர்ச்) உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், பங்குதந்தை ராயப்பன் தலைமையில் புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு திருப்பலி(பூஜை) நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வருகிறத 8ம் தேதி தேர்த்திருவிழா துவங்குகிறது. அன்றைய தினம் காலை திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றப்பட்டு, வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.

The post புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : St. Amala Annai Temple Thertri Festival Inauguration ,Erode ,St. Amala Annai Temple ,St. Amala Church ,State Bank Road, Erode ,
× RELATED காயங்களுடன் மயங்கிய வாலிபர்...