திருமலை: ஐதராபாத்தில் உள்ள வீட்டில் கன்னட நடிகை ஷோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட சின்னத்திரை நடிகை ஷோபிதா (29). பெங்களூருவில் வசித்து வந்த இவருக்கும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுதீர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி கொடுத்திருந்த ஷோபிதா ஐதராபாத் கச்சிபௌலி ஸ்ரீராம்நகர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் உள்ள படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின் றனர்.
The post கன்னட நடிகை ஷோபிதா ஐதராபாத்தில் தற்கொலை appeared first on Dinakaran.