- மோகனூர்
- மலையண்ணன்
- அரியூர் எஸ்டேட் காட்டூர்,
- ராசிபாளையம்
- மோகனூர், நாமக்கல் மாவட்டம்
- மின்சார வாரியம்
- நிர்மலா
- செல்லம்மாள்
மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ராசிபாளையம், ஏரியூர் தோட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மலையண்ணன்(70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி நிர்மலா (55). இவர்கள் வீட்டின் அருகே வசித்தவர் செல்லம்மாள் (65). இவர்கள் 3 பேரும் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், மோகனூர்-நாமக்கல் சாலையில் மழையில் குடை பிடித்தவாறு நடைபயிற்சி சென்றனர். அப்போது, பாம்பாட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன் மோதியதில் 3 பேரும், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
The post நடைபயிற்சி சென்ற 3 பேர் வேன் மோதி பலி appeared first on Dinakaran.