×

தூங்கி வழிந்த நிர்வாகத்தால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத் தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது X தள பதிவில் தெரிவித்ததாவது; “தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்!

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது திராவிட மாடல் ஆட்சிக்காலம்! இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் – திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

The post தூங்கி வழிந்த நிர்வாகத்தால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K.Stalin ,AIADMK ,
× RELATED உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்களுக்கு...