×

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: கழிவுநீரகற்றும் பணியில் 2,149 களப்பணியாளர்கள்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் இயங்கும் என்றும், கழிவுநீரகற்றும் பணியில் 2,149 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கும். எனவே பொதுமக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் 044-45674567 (20 இணைப்புகள்) கட்டணமில்லா தொலைபேசி எண். 1916 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கபட்ட 45 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 642 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: கழிவுநீரகற்றும் பணியில் 2,149 களப்பணியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board ,Chennai ,
× RELATED சென்னை மெரினாவில்...