×

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: 144 நிவாரண மையங்களில் 4,904 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வருவதால் காற்றின் வேகமும் மழைப் பொழிவும் குறைந்துள்ளது. ஃபெஞ்சல் புயல், மழை காரணமாக சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழைநீர் தேங்கியுள்ள 7 சுரங்கப் பாதைகளில் இரவுக்குள் மழைநீர் அகற்றப்படும். சென்னையில் 2,904 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.

மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். சென்னையில் மழைப்பொழிவு குறைந்துவருகிறது. எனினும், தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும். அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு இதுவரை 2,648 புகார்கள் வந்துள்ளன. இதில் 2000க்கும் மேற்பட்ட புகார்கள் தீர்வு காணப்பட்டது. சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம் என்று கூறினார்.

The post சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister K. K. S. S. R. ,Ramachandran ,Chennai ,Minister ,K. K. S. S. R. Ramachandran ,Storm Fengel ,
× RELATED மழை நிலைமையை சந்திக்க அரசு தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்