×

கோவை மாநகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம்கள்

 

கோவை, நவ. 30: கோவை மாநகராட்சியில் நடப்பு 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக சிறப்பு வரிவசூல் முகாம்கள், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, சிறப்பு வரிவசூல் முகாம்கள் வருகின்ற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நேரு நகர் பேருந்து நிறுத்தம், காளப்பட்டி ஆகிய பகுதிகளிலும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காமதேனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் தர்மராஜா மண்டபம், பூங்குலழி மாரியம்மன் கோவில் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட சங்கனூர் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்சன் சென்டர், ஓக்கிலியர் காலனி பள்ளி ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது. மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மஞ்சீஷ்வரி காலனி, சித்தி விநாயகர் கோவில், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் வருகின்ற 30ம் தேதியும், ஸ்ரீ வாரி அப்பார்ட்மென்ட், அம்பேத்கர் சாலை ஆகிய பகுதிகளில் வருகின்ற 1ம் தேதியும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனவும், இதனை பயன்படுத்தி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

The post கோவை மாநகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Coimbatore ,Dinakaran ,
× RELATED 7 இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்