×

7 இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்

 

கோவை, டிச. 8: கோவை மாநகராட்சிக்கு நடப்பு 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரை செலுத்தவேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்பட அனைத்து வரியினங்களை பொதுமக்கள் எளிதாக செலுத்த சிறப்பு வரி வசூல் முகாம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 7 மற்றும் 8வது வார்டு மக்கள் நலன் கருதி காளப்பட்டி நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே இன்று சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது. இதேபோல், மேற்கு மண்டலம் 35வது வார்டு இடையர்பாளையம் கற்பக விநாயகர் கோவில், 40வது வார்டுக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் ரோடு வீரகேரளம் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளிலும் இம்முகாம் நடக்கிறது.

வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14 வார்டு ஸ்ரீவத்சா ரெசிடென்சி, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 87வது வார்டு குனியமுத்தூர் செனோ மணி ஹால், 94வது வார்டு மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில், மத்திய மண்டலம் 32வது சங்கனூர் சிறுவர் பூங்கா ஆகிய இடங்களிலும் இச்சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது. இம்முகாம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி, மேல்நடவடிக்கையை தவிர்க்க வேண்டுகிறோம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

The post 7 இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Corporation ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சியில் சாலைகள் அமைக்க...