×

பழநியில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

பழநி, நவ. 30: பழநியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டாரம் சார்பில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மாவட்ட (மகளிர் திட்டம்) உதவி அலுவலர் ராம்குமார் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பழநி வட்டார வள அலுவலகத்தில் துவங்கிய பேரணி திண்டுக்கல் ரோடு, டி.பி. ரவுண்டானா, சண்முகபுரம் ரோடு வழியாக சென்று வட்டார வள அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் பிரியா, ஒருங்கிணைப்பாளர் சாந்தி மற்றும் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

The post பழநியில் பாலின பாகுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness ,Palani ,Tamil Nadu Rural Livelihood Movement ,District ,Assistant Officer ,Women Scheme ,Ramkumar ,
× RELATED இடைத்தரகர்களை நாடாமல் விவசாயிகள்...