×

பொன்னமராவதி பேரூராட்சி உறுப்பினர்கள் சாதாரண கூட்டம்

 

பொன்னமராவதி,நவ.30: பொன்னமராவதி பேரூராட்சி மன்றக்கூடத்தில் மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். துணை தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளநிலை உதவியாளர் கேசவன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் அம்ருத் 2.0 திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்தல், புதிதாக தார் சாலை, வடிகால் மற்றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணி, வரவு செலவு மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டது போன்ற 17 பொருள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவகாமி, முத்துலெட்சுமி, சாந்தி, அடைக்கி, ராமநாதன், ராஜா, திருஞானம், ரவி, சந்திரா மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

The post பொன்னமராவதி பேரூராட்சி உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati Municipal Council ,Ponnamaravati ,Ponnamaravati Municipal Council Hall ,Municipal President ,Sundari Alagappan ,Vice President ,Venkatesan ,Executive Officer ,Annadurai ,Kesavan ,council ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை