×

மின்னணு இயந்திரத்தில் முறைகேடு 90 வயது சமூக ஆர்வலர் போராட்டம்

புனே: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சமூக ஆர்வலர் போராட்டம் நடத்தி வருகிறார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தேர்தலில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் 7 சதவீதம் அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி புனேவை சேர்ந்த சமூக ஆர்வலர் பாபா ஆதவ்(90) புலே வாடா பகுதியில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பணம் மற்றும் வாக்கு இயந்திரம் பெரும் பங்காற்றியுள்ளது. தேர்தலின்போது வாக்கு இயந்திரம் பயன்படுத்துவதே மோசடியாகும் என தெரிவித்தார்.

The post மின்னணு இயந்திரத்தில் முறைகேடு 90 வயது சமூக ஆர்வலர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Pune ,Maharashtra ,
× RELATED புனேவில் நடைமேடையில் தூங்கிக்...