×

மோடி அரசில் சாதாரண மக்களுக்கு பக்கோடா… வேண்டப்பட்ட சிலருக்கு அல்வா: காங். விமர்சனம்

புதுடெல்லி: குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியா அண்டை நாடுகளைவிட பின்தங்கியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வௌியிட்ட எக்ஸ் பதிவில், ‘சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட 2024-2025ம் ஆண்டுக்கான உலகளாவிய ஊதிய அறிக்கையின் மூலமாக இந்தியாவில் ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்த சில தகவல்களை கண்டறிய முடிந்துள்ளது.

இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீதத்தினர், குறைவாக வருமானம் ஈட்டும் கடைசி 10 சதவீதத்தினரைவிட 6.8 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள். இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் முற்றிலும் சமமற்றதாகும். குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா, குறைந்த ஊதியம் கொண்ட சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு அதிகமுள்ளது. தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் உருவாக்கிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. சாதாரண மக்களுக்கு பக்கோடா, வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் அல்வா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடி அரசில் சாதாரண மக்களுக்கு பக்கோடா… வேண்டப்பட்ட சிலருக்கு அல்வா: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi government ,New Delhi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,India ,Jairam Ramesh Wowitta ,International Labour Organization ,Pakoda ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...