×

கடவுளின் மறுஅவதாரம் எனக்கூறி ஆசி வழங்கி வந்தவர் காதலனை 2வது திருமணம் செய்த நாளில் பெண் சாமியார் 3வது கல்யாணம்: உதவியாளரை மணந்தார்


திருவண்ணாமலை: கடவுளின் மறுஅவதாரம் எனக்கூறி ஆசி வழங்கி வந்த அன்னபூரணி அரசு அம்மா 2வது திருமண நாளில் தனது உதவியாளரை நேற்று மூன்றாவதாக திருமணம் செய்தார். திருமணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. கடவுளின் (அம்மன்) மறுஅவதாரம் எனக்கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தவர், அன்னபூரணி. இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் `அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.

அன்னபூரணி கடந்த 2014ம் ஆண்டு தனது முதல் கணவர் மற்றும் 14 வயது பெண் குழந்தையை பிரிந்து, காதலனான அரசு என்பவருடன் சேர்ந்து ஈரோட்டில் வாழ்ந்து வந்தார். பின்னர், அவர் உயிரிழந்த நிலையில் அன்னபூரணி தனது காதலன் அரசுவின் உருவச்சிலையை வடிவமைத்து வழிபட்டு வந்தார். கடவுளின் மறுஅவதாரம் எனக்கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்ததால் அன்னபூரணிக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனாலும், தொடர்ந்து யூடியூப்பில் ஆன்மிக சொற்பொழிவை நடத்தி வந்தார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, நான் சாமியார் இல்லை, கடவுள் என்று அறிவித்து தனக்கு தானே கோயிலை கட்டினார். வழக்கமாக கோயில்களில் கடவுளின் உருவச்சிலை இருக்கும். ஆனால் அன்னபூரணி கட்டிய கோயிலில் தன்னுடைய உருவத்தை கடவுள் சிலை போல் வடிவமைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த ஆசிரமத்தில் தனது காதலன் அரசுவின் உருவச்சிலையை வைத்து வழிபட்டு வந்தார்.

கடவுள் அவதாராக கூறிக்கொண்டு வலம் வந்த அன்னபூரணி, தனது 2வது கணவர் அரசுவை திருமணம் செய்த நவம்பர் 28ம் தேதி (நேற்று முன்தினம்) தனது ஆசிரமத்தில் தனது உதவியாளர் ரோஹித் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் சேர்ந்து திருமணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். மேலும், இந்த திருமணத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு தடபுடல் விருந்து கொடுத்தனர்.

The post கடவுளின் மறுஅவதாரம் எனக்கூறி ஆசி வழங்கி வந்தவர் காதலனை 2வது திருமணம் செய்த நாளில் பெண் சாமியார் 3வது கல்யாணம்: உதவியாளரை மணந்தார் appeared first on Dinakaran.

Tags : Samiyar ,Tiruvannamalai ,God ,Aasi ,
× RELATED திருவண்ணாமலை தீபமலை உச்சியில் ஜோதி...