×

முகத்தில் ஆசிட் வீசுவதாக பெண்ணுக்கு மிரட்டல் வாலிபருக்கு போலீஸ் வலை

அண்ணாநகர், நவ.30: திருமணம் செய்யாவிடில் முகத்தில் ஆசிட் வீசுவேன் என இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அமைந்தகரை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் நேற்று முன்தினம், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தி.நகர் பகுதியில் தங்கி, சி.ஏ படித்து வந்த எனக்கு, திருமுருகன் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறும் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் வீட்டை காலி செய்துவிட்டு, அமைந்தகரையில் தாய், தந்தையுடன் வசித்து வருகிறேன். வீட்டு முகவரியை தெரிந்து கொண்ட திருமுருகன், இங்கும் வந்து திருமணம் செய்ய சம்மதிக்கும்படி டார்ச்சர் செய்து வந்தார். எனவே, கோடம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தேன். இதையும் கண்டுபிடித்து, அங்கு வந்து, தொல்லை கொடுத்து வருகிறார். மேலும், திருமணம் செய்து கொள்ள மறுத்தால், உனது முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே, திருமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முகத்தில் ஆசிட் வீசுவதாக பெண்ணுக்கு மிரட்டல் வாலிபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Nitakarai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனம் தேர்வு