×

கடல் கடந்த காதல்: மியான்மர் நாட்டு பெண்ணை மணந்த தமிழக வாலிபர்


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரசுலாபுரத்தை சேர்ந்தவர் மதிவதனன்(33). டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படித்துள்ள இவர் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு சிங்கப்பூர் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மியான்மர் நாட்டை சேர்ந்த ஏய் ஏய் மோ(33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திவதனனுக்கு பெண் பார்ப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இதை கேட்ட மதிவதணன், தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 17ம் தேதி மதிவதனன் தனது காதலியுடன் பெரம்பலூரில் உள்ள இரசுலாபுரத்திற்கு வருகை தந்தார். பின்னர் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அப்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், ஏய் ஏய் மோ கழுத்தில் மதிவதனன் தாலி கட்டினார். மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு விமான டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மணப்பெண்ணின் தாய் வீடியோ கால் மூலம் மணமக்களை வாழ்த்தினார்.

The post கடல் கடந்த காதல்: மியான்மர் நாட்டு பெண்ணை மணந்த தமிழக வாலிபர் appeared first on Dinakaran.

Tags : MYANMAR ,PERAMBALUR ,MATHIVADHANAN ,TALUKA RASULAPURAM ,Singapore ,Singapore Food Manufacturing Company ,
× RELATED தரச் சான்றிதழுக்கான தகுதிகள்...