×

மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்

சென்னை: மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டது. ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருதப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் தாங்களாகவே அருகில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.

The post மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,CHENNAI ,Power Board ,Dinakaran ,
× RELATED புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில்...