×

தாய்லாந்து விமானத்தில் கிழக்கு நீல நாக்கு பல்லிகள் கடத்தி வந்த 2 பேர் கைது

திருமலை : தாய்லாந்து விமானத்தில் கிழக்கு நீல நாக்கு பல்லிகள் கடத்தி வந்த 2 பேர் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலைய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று கூறுகையில், விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் 2 பயணிகளை சோதனை செய்தபோது 6 கிழக்கு நீல நாக்கு பல்லிகள் (டிலிகுவா சின்கோயிட்ஸ்) கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிப்பட்ட உயிரினம் அழிந்துவரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது. எந்தவித ஆவணங்கள் இல்லாத நிலையில் கொண்டு வரப்பட்டதால் சுங்கச்சட்டம், 1962ன் பிரிவு 2(33)ன் கீழ், இந்த அயல்நாட்டுப் பல்லிகளை இறக்குமதி செய்வது சட்டவிரோதம் என்பதால் 6 பல்லிகளும் கைப்பற்றப்பட்டு தாய்லாந்து நாட்டுக்கு 26ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றனர். தாய்லாந்து விமானத்தில் கிழக்கு நீல நாக்கு பல்லிகள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தாய்லாந்து விமானத்தில் கிழக்கு நீல நாக்கு பல்லிகள் கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thailand ,Visakhapatnam ,AP State Visakhapatnam International Airport Revenue Directorate ,Visakhapatnam International Airport ,
× RELATED தாய்லாந்தில் இருந்து விமானத்தில்...